பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதில் பிரச்னை

Added : டிச 26, 2020
Share
Advertisement
மதுரை : பொங்கல் பரிசு ஜன.,4 முதல் வழங்குவதற்காக முன்கூட்டியே டோக்கன் வழங்கும்போது அரசியல் ரீதியான சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என உளவுத்துறை எச்சரித்துள்ளது. பொங்கலுக்காக ரேஷன் கடைகள் மூலம் ரூ.2500 மற்றும் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. சில இடங்களில் அ.தி.மு.க.,வினரே தங்கள் பொறுப்பில் டோக்கன் வழங்கி வருகின்றனர். இதற்கு

மதுரை : பொங்கல் பரிசு ஜன.,4 முதல் வழங்குவதற்காக முன்கூட்டியே டோக்கன் வழங்கும்போது அரசியல் ரீதியான சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

பொங்கலுக்காக ரேஷன் கடைகள் மூலம் ரூ.2500 மற்றும் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. சில இடங்களில் அ.தி.மு.க.,வினரே தங்கள் பொறுப்பில் டோக்கன் வழங்கி வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது.இதுதொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், பிரச்னை ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு தினமும் குறிப்பிட்ட பேர் பொருட்கள் வாங்கும் வகையில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். வருவாய், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து அசம்பாவிதம் நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண், பெண் என தனித்தனி வரிசை உருவாக்க வேண்டும். பிரச்னையை உருவாக்கி ரேஷன் பொருட்களை பதுக்குவதை தடுக்க கண்காணிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X