பாகூர்: பாகூர் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில், 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட நரம்பை, பனித்திட்டு மீனவ கிராமத்தில் நேற்று 16ம் ஆண்டாக, சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இதில்,அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு, சுனாமி பேரலையில்சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, மெழுகு வர்த்தி ஏற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.இதே போல், பாகூர் அடுத்துள்ள புதுக்குப்பம், தவளக்குப்பம் அடுத்துள்ளநல்லவாடு கடற்கரையிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.இதில், மீனவர்கள், பொது மக்கள் மெழுகு வர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE