புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் 3,391 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதுச்சேரியில் -18, காரைக்காலில் -4, ஏனாம்-2, மாகியில் -9 பேர் என மொத்தம் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 37,947 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 172 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 183 பேரும் என மொத்தம் 355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, முத்தியால்பேட்டையை சேர்ந்த 77 வயது முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 ஆகும்.மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 26 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இதுவரை, மாநிலத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 36,962 ஆக அதிகரித்துள்ளது.மாநிலத்தில் இதுவரை 4,70,201 பரிசோதனை மேற்கொண்டதில், 4,27,942 பேருக்கு தொற்றுஇல்லை என முடிவு வந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE