மதுரை : தென் மாவட்டங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, வியாழனில் நாகர்கோவிலில் புறப்படும் மும்பை சிறப்பு ரயில்(06352) 2021 ஜன., 3 முதல் 31 வரையும், திங்கள், வெள்ளியில் மும்பையில் புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில்(06351) 2021 ஜன.,4 முதல் பிப்.,1 வரையும், வியாழக்கிழமைகளில் மதுரையிலிருந்து பிகானேர் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்(06053) 2021 ஜன., 7 முதல் 28 வரையும், ஞாயிறுக் கிழமைகளில் பிகானிரிலிருந்து மதுரை புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில்(06054) 2021 ஜன., 10 முதல் 31 வரையும், வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் புறப்படும் ஓகா வாராந்திர சிறப்பு ரயில் (06733) 2021 ஜன.,1 முதல் 29 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் ஓகாவில் புறப்படும் ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்(06734) 2021 ஜன., 5 முதல் பிப்.,2 வரையும், ஞாயிற்றுகிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் பிலாஸ்பூர் வாராந்திர சிறப்புரயில் (06070) 2021 ஜன., 3 முதல் 31 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் பிலாஸ்பூரில் புறப்படும் திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்(06069) 2021 ஜன.,5 முதல் பிப்., 2 வரையும், புதன்கிழமைகளில் திருநெல்வேலியில் புறப்படும்.மும்பை தாதர் வாராந்திர சிறப்பு ரயில்(06072) 2021 ஜன., 6 முதல் 27 வரையும், வியாழக்கிழமைகளில் மும்பை தாதரில் புறப்படும் திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06071) 2021 ஜன.,7 முதல் 28 வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
2021 ஜன., 4 முதல் 25 வரை குஜராத் காந்திதாமிலிருந்து திங்கள் அதிகாலை 4:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (09424) செவ்வாய் இரவு 11:35 மணிக்கு திருநெல்வேலி செல்லும். மறுமார்க்கத்தில் 2021 ஜன., 7 முதல்28 வரை திருநெல்வேலியில் வியாழக்கிழமைகளில் காலை 7:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(09423)சனி அதிகாலை 2:35 மணிக்கு காந்திதாம் செல்லும். இந்த ரயில் ஆகமதாபாத், வதோதரா, சூரத், வாசைரோடு,பன்வெல், ரத்தினகிரி, மட்கான், கார்வார், மங்களூரு, கோழிக்கோடு,ேஷாரனுார், திருச்சூர், எர்ணாகுளம், காயங்குளம், திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுன் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE