பொது செய்தி

இந்தியா

மழை நிவாரணம் வழங்க வி.தொ.ச., வலியுறுத்தல்

Added : டிச 26, 2020
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பாகூரில் நடந்தது.சங்க தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் வேலை அறிக்கை சமர்ப்பித்து பேசினார். எதிர்காலை பணிகள் குறித்து சங்க தேசிய துணைத் தலைவர் ராமமூர்த்தி பேசினார். மாநில நிர்வாகிகள் விஜயபாலன், ராஜலட்சுமி, சீதாலட்சுமி கலந்து கொண்டனர்.கூட்டத்தில் டில்லி

புதுச்சேரி: புதுச்சேரி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பாகூரில் நடந்தது.சங்க தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் வேலை அறிக்கை சமர்ப்பித்து பேசினார். எதிர்காலை பணிகள் குறித்து சங்க தேசிய துணைத் தலைவர் ராமமூர்த்தி பேசினார். மாநில நிர்வாகிகள் விஜயபாலன், ராஜலட்சுமி, சீதாலட்சுமி கலந்து கொண்டனர்.கூட்டத்தில் டில்லி போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்ப பெற வேண்டும், விவசாய தொழிலாளர் சங்கத்தில் விடுப்பட்டுள்ள தொழிலாளர்களை உடனே சேர்க்க வேண்டும், மழை நிவாரணம் வழங்க வேண்டும், நுாறு நாள் வேலைக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X