பொது செய்தி

தமிழ்நாடு

நீர் மேலாண்மைத் திட்ட இயக்குனர் கள ஆய்வு

Added : டிச 26, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி: பெரியதச்சூரில் நீர் மேலாண்மைத் திட்ட இயக்குனர் நேரடி நெல் தைப்பு குறித்து கள ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில், கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நீர் நுட்ப மையம் மற்றும் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம், இந்திய ஆயில் நிறுவனம் லிமிடெட் இணைந்து நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில், நீர் நுட்ப மைய இயக்குனர்

விக்கிரவாண்டி: பெரியதச்சூரில் நீர் மேலாண்மைத் திட்ட இயக்குனர் நேரடி நெல் தைப்பு குறித்து கள ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில், கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நீர் நுட்ப மையம் மற்றும் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையம், இந்திய ஆயில் நிறுவனம் லிமிடெட் இணைந்து நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில், நீர் நுட்ப மைய இயக்குனர் டாக்டர் பன்னீர்செல்வம், மயிலம் அடுத்த பெரியதச்சூர் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு கள ஆய்வு செய்தார். அப்போது அவர் விவசாயிகளிடையே, நேரடி நெல் விதைப்பில் விதை குறைவு சாதாரண நடவை விட 10 நாட்கள் முன்னதாக அறுவடை ஆகிவிடும். நாற்று இல்லாமல் நடவும் இல்லாமல் செலவும் குறைவு என ஆலோசனை வழங்கினார்.தொடர்ந்து, திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்புமணி சுற்றுப்புறச் சூழல், சிக்கன நீர் சேமிப்பு குறித்து ஆலோசனை வழங்கி, நீர் மேலாண்மைத் திட்டத்தில் நீர் மறைய நீர் கட்டுதல் தொழில் நுட்பம் குறித்து விளக்கினார்.முதுநிலை ஆராய்ச்சியாளர் கீர்த்தனன், பெரியதச்சூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X