பொது செய்தி

தமிழ்நாடு

35 மையங்களில்தேசிய திறனாய்வு தேர்வு

Added : டிச 26, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 மையங்களில் இன்று கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி தேசிய திறனாய்வு தேர்வு நடக்கிறது. மத்திய அரசு மூலம் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தாண்டு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 மையங்களில் இன்று கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி தேசிய திறனாய்வு தேர்வு நடக்கிறது.

மத்திய அரசு மூலம் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய திறனாய்வு எழுத 2620 பேர் விண்ணப்பித்துள்ளனர். பரமக்குடியில் -13, மண்டபம் 12, ராமநாதபுரத்தில் 10 என 35 மையங்களில் இன்று தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் கிருமிநாசினி மருந்துதெளித்தும், சமூக இடைவெளியுடன் ஒருஅறையில் 10 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும், சானிசைடர் பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. -------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X