வானுார்: வானுாரில் ரேஷன் கடை ஊழியர்கள் பி.ஓ.எஸ்., இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.வானுார் வட்ட வழங்கல் நிர்வாகத்தின் கீழ், 110 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகளில் பி.ஓ.எஸ்., இயந்திரம் மூலம் அத்தியவாசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.சமீபகாலமாக இயந்திரம், சர்வர் கோளாறு காரணமாக சரியாக இயங்கவில்லை.இது குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.ஆத்திரமடைந்த வானுார் வட்ட ரேஷன் கடை ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று வானுார் தாலுகா அலுவலகத்தில், பி.ஓ.எஸ்., இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடபதியிடம் ஒப்படைத்து, போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.அவலுார்பேட்டைமேல்மலையனுாரில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சம்பத் தலைமை தாங்கி, பி.ஓ.எஸ்., இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்க வந்தனர். அங்கு அலுவலர் வராத நிலையில், அலுவலக மேஜை மீது வைத்து சீரமைத்து தரக் கோரி ஒப்படைத்து போராட்டம் நடத்தினர்.செஞ்சிசெஞ்சி தாலுகாவைச் சேர்ந்த ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சம்பத் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் தனசேகரன், மாவட்ட இணைச் செயலாளர் பழனிவேல் உட்பட 30க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் செஞ்சி வட்ட வழங்கல் அலுவலகத்தில் பி.ஓ.எஸ்., இயந்ததிரங்களை ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE