பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

Added : டிச 26, 2020
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, அரசு செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா தலைமை தாங்கினார். கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், அனைத் துத் துறை வளர்ச்சிப் பணிகள்,

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, அரசு செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா தலைமை தாங்கினார். கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், அனைத் துத் துறை வளர்ச்சிப் பணிகள், குறிப்பாக, வேளாண் உற்பத்தி விபரங்கள், தோட்டக்கலையில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் விபரங்கள் குறித்தும், வேளாண் பொறியியல் துறையில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை, முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள், பொதுப்பணி துறை, மின்துறை, சுகாதாரம், ஆவின், தொழில், பள்ளி கல்வி, நகராட்சி உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தபடும் நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த விளக்க புகைப்படை கண்காட்சியை பார்வையிட்டார்.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மகேந்திரன், சப் கலெக்டர் அனு உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X