மாவட்டத்தில் 75 சதவீத உடல் ஊனம், 40 சதவீதத்திற்கு மேல் தசை நரம்பு பாதிப்பு, மூளை வளர்ச்சி இன்மை போன்ற பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிக்கு இத்துறை மூலம் மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இங்கு மட்டுமின்றி வருவாய் துறையிலும் தாசில்தார் மூலம் கண்பார்வை அற்றோர், காது கேளாத, வாய் பேசமுடியாதோர், 75 சதவீதத்திற்கு கீழ் உடல் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.1000 வழங்குகின்றனர்.
வருவாய்துறையை விட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் அதிக நிதி உதவி கிடைப்பதால், அந்தந்த தாசில்தாரிடம் உதவி தொகையை ரத்து செய்துவிட்டு, அதற்கான சான்றுடன் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு நுாற்றுக் கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் விண்ணப்பித்து பல மாதமாகியும், நிதி உதவியை அனுமதிக்கவில்லை. இதனால், வருவாய்துறையில் பெற்ற நிதியையும் இழந்து, மாற்றுத்திறனாளிகள் தவிக்கின்றனர்.
குறிப்பாக மூளை வளர்ச்சி குன்றியோர், யாருமே ஆதரவில்லாதவர்களே அதிகளவில் நிதி உதவி கோரி விண்ணப்பித்து பல மாதமாக கிடைக்காமல், அன்றாட உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர்.மாநில அளவில் முதலிடம் மாற்றுத்திறனாளிக்கு அதிக நிதி உதவி பெற்றுத் தந்த சிவகங்கை மாற்றுத் திறனாளி நலத்துறைக்கு மாநில அரசு முதலிடத்திற்கான விருதை வழங்கியுள்ளது. விருதுபெற்ற மாவட்டமாக இருப்பினும், உண்மையிலேயே புதிதாக நிதி வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் பல மாதமாக தவித்து வருவது தான் வேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் விண்ணப்பித்த அனைவருக்கும் விரைந்து உதவி தொகையை பெற்றுத்தர வேண்டும்.
நிலுவையுடன் தொகைமாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணக்குமார் கூறியதாவது: நடப்பாண்டு 1200 புதிய மாற்றுத்திறனாளிகளுக்கு நிதிஉதவி பெற்றுத் தந்துள்ளோம். வருவாய்துறையில் ரத்து செய்துவிட்டு, இங்கு விண்ணப்பித்த 50 பேர்களுக்கு மட்டுமே இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நிதி ஒதுக்கியதும் விண்ணப்பித்த மாதம் முதல் நிலுவையுடன் உதவித்தொகை தரப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE