திருப்புவனம் : திருப்புவனம் நான்கு வழிச்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார், வாகன ஆய்வாளர் சோமசுந்தரம்தலைமையில் வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி வாகனங்களின் முன்புற பம்பர் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் அகற்றினர்.வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி 32 வாகனங்களின் முன்புற பம்பர் அகற்றப்பட்டது.வாகனங்களுக்கு விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுஉள்ளது. வாகனங்களில் விதிகளை மீறி எதனையும் பொருத்தக்கூடாது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE