கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் முறையான சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கல்வராயன்மலையில் 170க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பல கிராமங்களுக்கு முறையான தார் சாலை வசதி இல்லை.தொரடிபட்டு ஊராட்சிக்குட்பட்ட வண்டகபாடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன், குறிப்பாக மழைக் காலங்களில் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் கூட செல்ல இயலாத அவலம் நிலை உள்ளது.கடந்த வாரம் கல்வராயன்மலையில் பெய்த கன மழை காரணமாக வண்டகபாடி செல்லும் மண் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாகி நடந்து செல்லக்கூட இயலாத லாயகற்ற நிலையில் மாறியுள்ளது.வண்டகபாடி கிராமத்தில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்கள் கறக்கும் பாலை கொள்முதல் செய்ய வாகனங்கள் கூட வர இயலாத நிலையில் சாலை மோசமாக உள்ளது.இதனால், அப்பகுதி மக்கள், கிராமத்தில் சேகரித்த பால் கேன்களை நீண்ட கழிகளில் கட்டி தோளில் சுமந்து செல்லும் நிலை உள்ளது.எனவே, வண்டகபாடி கிராமத்திற்கு முறையான சாலை வசதி ஏற்படுத்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE