பொது செய்தி

தமிழ்நாடு

சமூக பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பு வயது தளர்வு முகாம்

Added : டிச 26, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு வயது தளர்வு முகாம் நடந்தது.18 வயதுக்கும் குறைவாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.முகாமிற்கு, கலெக்டர் கிரண் குராலா தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்புத் திட்ட

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு வயது தளர்வு முகாம் நடந்தது.18 வயதுக்கும் குறைவாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.முகாமிற்கு, கலெக்டர் கிரண் குராலா தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் குமார் வரவேற்றார்.132 பயனாளிகள் பங்கேற்ற முகாமில் தாசில்தார்கள் கமலம், அருங்குளவன், பாண்டியன், கோபாலகிருஷ்ணன், ராஜலட்சுமி, வெங்கடேசன் ஆகியோர் பயனாளிகளைத் தேர்வு செய்தனர்.எலும்பு முறிவு மருத்துவர் பரணிதரன், கண் மருத்துவர் காயத்ரி, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி,மனநல மருத்துவர் பிரவீனா ஆகியோர் பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X