திண்டுக்கல் : தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை ஏ.பி.ஜே., அப்துல்கலாம் இலவச பயிற்சி மையம் இன்று (டிச.27) நடத்துகிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இணைய வழியில் நடக்கிறது. இந்த நேரத்தில் பங்கேற்க இயலாதவர்கள், நாளை மாலைக்குள் எப்போது வேண்டுமானலும் பங்கேற்கலாம். தேர்வு முடிந்த பின் தமிழகம் முழுவதுக்குமான தரப்பட்டியலும் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்படும்.விரும்புவோர் பெயர், மாவட்டம் மற்றும் Group 1 Prelims Model Exam என பதிந்து 88380 19287 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டும் என, மையத்தின் இயக்குனர் மணிமொழியன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE