சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

Added : டிச 27, 2020
Share
Advertisement
சின்னசேலம்: சின்னசேலத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பி.ஓ.எஸ்., இயந்திரத்தை திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.விற்பனை முனைய இயந்திரத்தில் (பி.ஓ.எஸ்.,) கைரேகை பதிவு சரியாக வேலை செய்யாததால், பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே

சின்னசேலம்: சின்னசேலத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பி.ஓ.எஸ்., இயந்திரத்தை திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.விற்பனை முனைய இயந்திரத்தில் (பி.ஓ.எஸ்.,) கைரேகை பதிவு சரியாக வேலை செய்யாததால், பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.இதனால் இயந்திரத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்து, தாலுகா அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள் சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் திரண்டு இயந்திரத்தை ஒப்படைக்க முயன்றனர்.அப்போது, குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் பாண்டியன் இயந்திரத்தை வாங்க மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் திரும்ப எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X