கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட உள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குத் தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, தச்சூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.இந்த இயந்திரங்களை முதல் கட்ட பரிசோதனை செய்து தயார் நிலையில் வைத்திருக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்ப பொறியாளர்கள், 29ம் தேதி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்ய உள்ளனர்.பரிசோதனைக்கு முன், இயந்திரங்களை இ.எம்.எஸ்., செயலியில் ஸ்கேனிங் செய்ய உள்ளதால், நாளை 28ம் தேதி காலை 10:30 மணியளவில் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் கிரண் குராலா தலைமையில் கிடங்கு திறக்கப்பட உள்ளது.எனவே, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE