புவனகிரி: சிதம்பரத்தில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது.சேத்தியாத்தோப்பு அபிநயா புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை ஆண்டுதோறும் சிதம்பரம் கீழ வீதி கோதண்டராமன் திருமண மண்டபத்தில் நடந்து வந்தது.கொரோனா பரவல் காரணமாக புத்தக கண்காட்சிமற்றும் விற்பனை தடைபட்டது. ஊரடங்கு தளர்வு அறிவித்ததால், சிதம்பரம் கோதண்டராமன் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் ஜன., 19ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் காலை 10 முதல் இரவு 9 மணி வரை அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.கல்வி, யோகா, இலக்கியம், இலக்கணம், தத்துவம், உளவியல், வரலாறு, ஆன்மிகம், சமையல் கலைஉள்ளிட்ட5ஆயிரம் தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. நீண்ட இடைவெளிக்குப்பின் துவங்கிய கண்காட்சியில் மாணவர்கள் சமூகஆர்வலர்கள் புத்தகங்களை தேர்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE