பொது செய்தி

தமிழ்நாடு

இறந்த மயிலுக்கு தேசிய கொடி போர்த்தி இறுதி மரியாதை

Added : டிச 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே இறந்த மயிலுக்கு, கலெக்டர் உத்தரவின் பேரில் தேசிய கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூரில் வராக ஆற்றின் கரையோரம் நேற்று காலை மயில் இறந்து கிடந்தது.தகவலறிந்த பெரியதச்சூர் வி.ஏ.ஓ., லோகநாதன், கால்நடை மருத்துவர் பாண்டியன் நேரில் சென்று இறந்த மயிலை மீட்டு பிரேத பரிசோதனை
 இறந்த மயிலுக்கு தேசிய கொடி போர்த்தி இறுதி மரியாதை

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே இறந்த மயிலுக்கு, கலெக்டர் உத்தரவின் பேரில் தேசிய கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூரில் வராக ஆற்றின் கரையோரம் நேற்று காலை மயில் இறந்து கிடந்தது.தகவலறிந்த பெரியதச்சூர் வி.ஏ.ஓ., லோகநாதன், கால்நடை மருத்துவர் பாண்டியன் நேரில் சென்று இறந்த மயிலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.அதில், விவசாய நிலத்திலிருந்து பூச்சி மருந்து கலந்த உணவை சாப்பிட்டு மயங்கிக் கிடந்த போது நாய்கள் கடித்து இறந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து விழுப்புரம் வனத்துறை வனவர் ஜெயபால், வனகாப்பாளர் கதிர்வேல் ஆகியோரிடம் மயிலை ஒப்படைத்தனர். கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் தேசிய பறவையான மயிலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர்.பின்னர் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் மயில் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X