சிவகங்கை : ''சிவகங்கை மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகளுக்கு சீல்டு, லெசீஸ், கட்டாணிபட்டி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது,'' என கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
பெரியாறு அணையில் இருந்து ஆண்டுதோறும் சிவகங்கை மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயத்திற்கு கடைமடை பகுதி வரை தண்ணீர் திறக்க வேண்டும்.ஆனால், கடந்த செப்., 27 முதல் 900 கன அடி வீதம், 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் சிவகங்கை மாவட்ட கடைமடை பகுதிக்கு சென்று சேரவில்லை. இது குறித்து விவசாயிகள் பல முறை கலெக்டரிடம்முறையிட்டும், நடவடிக்கை இல்லை. இதையடுத்து ஜன., 7ல் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
சீல்டு, லெசீஸ்கால்வாய்க்கு நீர் திறப்புகலெக்டர் கூறியதாவது:மாவட்டத்தில் 85563 ஏக்கருக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் ஒரு போக பாசன பகுதி 6038.53 ஏக்கர். வைகை அணையில் இருந்து 85563 ஏக்கர் பாசன நிலங்களுக்கு திறக்கப்படும் 900 கன அடியில், சிவகங்கை பாசன பரப்பான 6038.53 ஏக்கருக்கு 63.52 கன அடி வரை திறந்து விடப்பட்டுள்ளது. முதல் 45 நாட்கள் தண்ணீர் வழங்கிய நிலையில், வைகை, பெரியாறு அணை நீர் இருப்பை கருத்தில் கொண்டு 5 நாட்களுக்கு ஒரு முறை திறந்து, அடைத்தும் மூன்று முறை பாசன நீர் வழங்கினர்.
தற்போது சிவகங்கை மாவட்ட சீல்டு கால்வாய் 40, லெசீஸ் கால்வாய்க்கு 40, கட்டாணிபட்டி 2 வது மடை பகுதிக்கு 5 கன அடி வீதம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டுஉள்ளது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE