சேத்தியாத்தோப்பு: பின்னலுார் அரசு பள்ளியில் பயின்ற மருத்துவ மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, ஆசிரியர் முன்னேற்ற சங்க நிறுவனர் துரைமணிராஜன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் லதா, ஊராட்சி தலைவர்கள் பிரபுதாஸ், அம்பாள்புரம் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.வடலுார் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ், புள்ளியியல் துறை இணை இயக்குனர் அழகப்பன், தலைமை ஆசிரியர்கள் வடலுார் திருமுருகன், தர்மநல்லுார் மனோகரன், பொறியாளர் புகழேந்தி, முன்னாள் அரசு வழக்கறிஞர் பழனிமனோகரன், வழக்கறிஞர் வேல்ராமலிங்கம், ஆவின்பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கலைவாணன் ஆகியோர் அரசு பள்ளியில் பயின்று மருத்து படிப்பில் சேர்ந்த மாணவி பானுப்பிரியாவை வாழ்த்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE