தேவகோட்டை : ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்ட பயோ மெட்ரிக் இயந்திரத்தை விற்பனையாளர்கள், அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை தேவகோட்டையில் நடத்தினர்.
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பயோ மெட்ரிக் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் தொலை தொடர்பு வசதி சீராக இல்லாத நிலையில் இயந்திரத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கைரேகை வைப்பதில் தவறு ஏற்படுவதாகவும், பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையில் மக்களுக்கும், ரேஷன் கடை பணியாளர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. பொங்கல் இலவசம் கொடுக்க வேண்டிய நிலையில் இந்த தகராறு பெரியஅளவில் ஏற்படலாம் என ரேஷன்கடை பணியாளர்கள் அச்சப்படுகின்றனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் விசுவநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, மாவட்ட அமைப்பாளர் இளமாறன் முன்னிலையில் 60 ரேஷன் கடை பணியாளர்கள் கடைகளுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்களை தாலுகா அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்பு போராட்டம் நடத்தினர்.வட்ட வழங்கல் அலுவலர் நாகநாதனிடம் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கூறி கோரிக்கை மனுவை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE