பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பைகளுக்கு தீர்வு சொல்லும் 'ஸ்டார்ட் அப்'

Added : டிச 27, 2020
Share
Advertisement
தற்போது 'காதி பிராண்ட்' இந்தியளவில் பிரபலமாகி வருகிறது. பல பெரிய கம்பெனிகள், காதி பிராண்டுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன. இந்தியாவில், ஆண்டுதோறும், ஒரு கோடியே, 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 90 லட்சம் டன் கழிவாக மாறுகிறது. அதில், 54 லட்சம் டன் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகிறது.மீதமுள்ள, 36 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள்,

தற்போது 'காதி பிராண்ட்' இந்தியளவில் பிரபலமாகி வருகிறது. பல பெரிய கம்பெனிகள், காதி பிராண்டுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றன.

இந்தியாவில், ஆண்டுதோறும், ஒரு கோடியே, 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 90 லட்சம் டன் கழிவாக மாறுகிறது. அதில், 54 லட்சம் டன் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகிறது.மீதமுள்ள, 36 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைக்கு ஆண்டுதோறும் வருகின்றன.

தினமும், 10 ஆயிரம் டன் சேகரமாகும் கழிவில், ஒரு முறை உபயோகப்படுத்தி வெளியே துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் அதிகம்.இந்த பிளாஸ்டிக் பைகளை, எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்று, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், ஜெய்ப்பூரில் உள்ள குமாரப்பா காகித நிறுவனத்தின் உதவியுடன் இணைந்து, கனமான பேப்பர் பை (Carry Bag) தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.

பிளாஸ்டிக் கழிவை உபயோகப்படுத்துவதால், தற்போதுள்ள உற்பத்தி செலவு, 34 சதவீதம் குறைத்துள்ளதால் பைகளின் அடக்க விலையும் குறைகிறது. இவை மாசற்றது, விலை குறைவானவை, மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம்; மறு சுழற்சியும் செய்யலாம்.'காதி இந்தியா' தனது கிளைகள் வாயிலாக, இந்த பைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. தவிர, வாழைத்தண்டிலிருந்து 9-10 ஜி.எஸ்.எம்., ஹேண்ட்மேட் டிஸ்யூ பேப்பர் தயாரிப்பு போன்ற பல புதுமையான முயற்சிகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.

இணைய தளம்: www.knhpi.org.inஇந்தவகை பைகள் நீங்களும் தயாரிக்க உங்களுக்கும் ஆலோசனை மற்றும் பயிற்சியும் அளிக்கின்றனர். இ-மெயில் முகவரி: knhpijaipur @gmail.com

'டேஷ் போர்டு' ஏற்றுமதியாளர்களுக்கு உள்ள பெரிய பிரச்னையே, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தின் ஏற்றுமதி பொருள் என்னென்ன? எந்த பொருள் அதிகமாக ஏற்றுமதியாகிறது? உட்பட பல விபரங்களை தெரிந்து கொள்ள, மத்திய அரசு சமீபத்தில் ஒரு இணையப்பக்கத்தை கொண்டு வந்துள்ளது.

அதில், ஒவ்வொரு மாநிலத்தின் ஏற்றுமதி பற்றிய விபரங்கள், துறைமுகம் வாரியாக, பொருட்கள் வாரியாக, மாதந்தோறும் எவ்வளவு ஏற்றுமதியாகி இருக்கிறது, எந்த மாவட்டத்திலிருந்து என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி ஆகியிருக்கின்றன என்ற அருமையான தகவல்களை கொடுக்கிறது.ஏற்றுமதிக்கு உபயோகமான தகவல் தளம்.

dashboard.commerce.gov.in/commercedashboard.aspxசந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com,

-சேதுராமன் சாத்தப்பன்-

அலைபேசி எண்: 98204 51259. இணையதளம்: startupandbusinessnews.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X