பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் ஆலோசனைக்குழு கூட்டம்

Added : டிச 27, 2020
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், 24 வது அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ஜவகர்லால் தலைமை தாங்கினார். விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்ரமணியன், பேராசிரியர்கள் பசுபதி, ேஷாபனா, வேளாண் துணை இயக்குனர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம்

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், 24 வது அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக விரிவாக்க கல்வி இயக்குனர் ஜவகர்லால் தலைமை தாங்கினார். விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்ரமணியன், பேராசிரியர்கள் பசுபதி, ேஷாபனா, வேளாண் துணை இயக்குனர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் வரவேற்றார்.ஐதராபாத், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இயக்குனர் பிரசாத், காணொளி காட்சி மூலம் ஆலோசனைகள் வழங்கினார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கர், முதன்மை விஞ்ஞானி பாஸ்கரன் ஆகியோர் கலப்பு பண்ணையம், அகில இந்திய வானொலி செயலி பதிவிறக்கம் குறித்து விளக்கமளித்தனர்.நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது. நபார்டு வங்கி, இந்தியன் வங்கி, மாவட்ட தோட்டக்கலை, வேளாண் துறை, கால்நடை, பொறியியல், மீன்வளம், பட்டு வளர்ச்சி, மாவட்ட தொழில் மையம் மற்றும் பொறியியல் துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஆலோசனைக்குழு உறுப்பினர்களிடம் 2021 - 22ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கைக்கு ஆலோசனை பெறப்பட்டது.வேளாண் அறிவியல் நிலைய நுழைவு வளாகத்தில், விற்பனை மற்றும் ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. அறிவியல் நிலைய செயல்பாடுகள், நவீன தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X