பொது செய்தி

தமிழ்நாடு

அப்பட்டமாக பொய் பேசுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் சம்பத் பதிலடி

Added : டிச 27, 2020
Share
Advertisement
கடலுார்: தொழில்துறை செயல்பாடு தெரியாமல், ஸ்டாலின் அப்பட்டமாக பொய் கூறி வருகிறார் என, அமைச்சர் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.கடலுார் மாவட்டத்தில் மழை பாதிப்பை பார்வையிட வந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர், தொழில்துறை அமைச்சர் சம்பத் செயல்பாடு குறித்து விமர்சனம் செய்தனர்.கடலுாரில் பல்வேறு நிகழ்ச்சிகளில்

கடலுார்: தொழில்துறை செயல்பாடு தெரியாமல், ஸ்டாலின் அப்பட்டமாக பொய் கூறி வருகிறார் என, அமைச்சர் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.கடலுார் மாவட்டத்தில் மழை பாதிப்பை பார்வையிட வந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர், தொழில்துறை அமைச்சர் சம்பத் செயல்பாடு குறித்து விமர்சனம் செய்தனர்.கடலுாரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் சம்பத், கூறியதாவது:2015ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ 2.42 லட்சம் கோடிக்கு 92 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் 48 நிறுவனங்கள் தொழில் துறை சார்ந்தது, மீதமுள்ள மின்சக்தி தொடர்புள்ளவை. ரூ. 74,000 கோடி தொழில் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 32 நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை துவங்கியுள்ளன.2019ல் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு 302 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 85 சதவீதம் நிறுவனங்கள் கட்டடம் கட்டுதல் மற்றும் உற்பத்தி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 28 நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கி உள்ளது. இதன் மூலமாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.2019ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு வர 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.கொரோனா பாதிப்பு காலத்திலும் தமிழகத்தில் ரூ. 45 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இது தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அப்பட்டமாக பொய் கூறி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X