தாமரைக்குளம் தண்ணீரை நிறுத்த திட்டம் அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாமரைக்குளம் தண்ணீரை நிறுத்த திட்டம் அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

Added : டிச 27, 2020
Share
கன்னிவாடி : தாமரைக் குளத்திற்கான குடகனாற்று நீரை தடுக்க முயற்சித்ததால், முற்றுகையிட்ட மக்கள் அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். மேற்கு தொடர்ச்சி மலையின் வரத்துநீர் குடகனாறு வழியே அழகாபுரி அணைக்கு செல்கிறது. வழியோர கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட கண்மாய்களை நிரப்பி செல்கிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடிக்கும், 200 கிராமங்களின் நிலத்தடி

கன்னிவாடி : தாமரைக் குளத்திற்கான குடகனாற்று நீரை தடுக்க முயற்சித்ததால், முற்றுகையிட்ட மக்கள் அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.

மேற்கு தொடர்ச்சி மலையின் வரத்துநீர் குடகனாறு வழியே அழகாபுரி அணைக்கு செல்கிறது. வழியோர கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட கண்மாய்களை நிரப்பி செல்கிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடிக்கும், 200 கிராமங்களின் நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது.இத்தடத்தில் தாமரைக்குளம் நிரம்பி மறுகால் செல்லும் வகையில் வழித்தடம் உள்ளது. அதற்கு முன்னதாக அனுமந்தராயன்கோட்டை அருகே வண்டிப்பாலம் மதகில் இருந்து ஆற்றுத் தண்ணீரை மாற்றுப்பாதையில் திருப்ப அதிகாரிகள் திட்டமிட்டனர்.

பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் உதயகுமார் தலைமையில் அங்கு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த தாமரைக்குளம் பாசன விவசாயிகள், மதகு பகுதியில் கூடினர். அனுமந்தராயன்கோட்டை, பொன்மான்துறை, குட்டத்துப்பட்டி கிராம மக்கள்அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.வழக்கமான வழித்தடத்தை மாற்றி வண்டிப்பாலம் மதகை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். சமரச முயற்சி தோல்வியடைந்ததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X