சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் மக்கள் சபையில் நுாறுநாள் தொழிலாளர்களுக்கு தடை

Added : டிச 27, 2020
Share
Advertisement
வடமதுரை : தி.மு.க.,வினர் நடத்தும் மக்கள் சபை கூட்டங்களுக்கு 100 நாள் திட்ட பணியாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக தி.மு.க.,வினர் கிராம சபை என்ற பெயரில் தமிழக அளவில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் தி.மு.க., நிர்வாகிகளும், ஆதரவாளர்களுமே அதிகம் பங்கேற்கின்றனர்.ஊராட்சி தலைவர் தி.மு.க.,வைச் சார்ந்தவர்களாக இருக்கும் கிராமங்களில் 100 நாள் திட்ட

வடமதுரை : தி.மு.க.,வினர் நடத்தும் மக்கள் சபை கூட்டங்களுக்கு 100 நாள் திட்ட பணியாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக தி.மு.க.,வினர் கிராம சபை என்ற பெயரில் தமிழக அளவில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் தி.மு.க., நிர்வாகிகளும், ஆதரவாளர்களுமே அதிகம் பங்கேற்கின்றனர்.ஊராட்சி தலைவர் தி.மு.க.,வைச் சார்ந்தவர்களாக இருக்கும் கிராமங்களில் 100 நாள் திட்ட பணியாளர்களையும் அழைத்து வந்து அமர வைத்து கூட்டம் நடத்தியுள்ளனர்.சில இடங்களில் இந்த தொழிலாளர்கள் தங்கள் பயன்படுத்திய மண்வெட்டி, சட்டி என தளவாட பொருட்களுடன் பங்கேற்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில் கிராம சபை என்ற பெயரில் அரசியல் கட்சிகள், தனிநபர்கள் கூட்டம் நடத்த அரசு தடைவிதித்தது. இருப்பினும் தி.மு.க.வினர் மக்கள் சபை கூட்டம் என பெயரை மாற்றி நடத்தி வருகின்றனர்.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், நுாறுநாள் திட்டப் பணிக்கென வரும் தொழிலாளர்கள், பணி நேரத்தில் இதுபோன்ற கூட்டங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது;தவறும் பட்சத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X