பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலுக்கு சொந்தமான சொத்து மீட்பு

Added : டிச 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்பு சொத்தை, அறநிலையத் துறையினர், நேற்று மீட்டனர்.காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான புஞ்சை நிலம், காஞ்சிபுரம், ஆலடி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில், 76 சென்ட் உள்ளது. இந்த இடத்தை, வடிவேல் என்பவர் குத்தகை எடுத்து பராமரித்து வந்தார். இவரிடம் இருந்து, மணி என்பவர் வாங்கி, பயன்படுத்தி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்பு சொத்தை, அறநிலையத் துறையினர், நேற்று மீட்டனர்.காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான புஞ்சை நிலம், காஞ்சிபுரம், ஆலடி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில், 76 சென்ட் உள்ளது.

இந்த இடத்தை, வடிவேல் என்பவர் குத்தகை எடுத்து பராமரித்து வந்தார். இவரிடம் இருந்து, மணி என்பவர் வாங்கி, பயன்படுத்தி வந்தார்.அந்த நிலத்திற்கான குத்தகை வாடகை பணம் செலுத்தாததால், அறநிலையத் துறையினர், நேற்று அந்த இடத்தை மீட்டனர்.இது குறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, மணி என்பவர், 2005ல் இருந்து பயன்படுத்தி வந்தார். வாடகை செலுத்தாததால், இடத்தை காலி செய்ய சொல்லி, நீதிமன்றத்தை அணுகினோம். கடந்த, 2012ல் இருந்து வழக்கு நடந்து, சமீபத்தில் கையகப்படுத்த, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெயா முன்னிலையில், கோவில் பணியாளர்கள், அந்த இடத்தை மீட்டனர். அதன் மதிப்பு, 10 கோடி ரூபாய்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
27-டிச-202006:58:49 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj இரண்டாயிரத்து ஐந்தில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளுக்கு என்ன அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்படுகிறது பத்திரப்பதிவாளர்கள் ஆங்காங்கு ஆக்கிரமிப்புகளுக்கும் பட்டா கொடுப்பதால்தான் இதுபோன்ற ஆக்கிரமிப்பு செயல்பாடுகள் அதிகமாகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X