பொது செய்தி

தமிழ்நாடு

'குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்'

Added : டிச 27, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு : ஸ்ரீபெரும்புதுார் குற்றவியல் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா உத்தரவிட்டார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார் சார்பு நீதிமன்றம், ஸ்ரீபெரும்புதுார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள், புதிதாக கட்டப்பட்டன.இவற்றின் துவக்க விழா, செங்கல்பட்டு

செங்கல்பட்டு : ஸ்ரீபெரும்புதுார் குற்றவியல் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார் சார்பு நீதிமன்றம், ஸ்ரீபெரும்புதுார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள், புதிதாக கட்டப்பட்டன.இவற்றின் துவக்க விழா, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வளாகத்தில், மக்கள் சமசர நீதிமன்ற அரங்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பவானி சுப்பராயன் தலைமையில், நேற்று நடந்தது.அவர்கள், காணொலி காட்சி மூலம், நீதிமன்ற கட்டடம் மற்றும் புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா வரவேற்றார்.

விழாவில், புஷ்பா சத்யநாராயணா பேசியதாவது;புதிய நீதிமன்றங்களை திறப்பதில் மகிழ்ச்சி. ஆலந்துாரில், சார்பு நீதிமன்றம் திறக்கப்பட்டதால், அங்குள்ளவர்கள், தாம்பரத்திற்கு செல்ல வேண்டியது இல்லை.வழக்கறிஞர்கள், போராட்டம் நடத்தாமல், வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிமன்றங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.ஸ்ரீபெரும்புதுார் குற்றவியல் நீதிமன்றத்தில், 6,476 வழக்குகள், முதல் தகவல் அறிக்கை நிலையில் உள்ளன. வழக்குகளை விரைந்து முடிக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X