சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மீன் வியாபாரி பலி

Added : டிச 27, 2020
Share
Advertisement
மப்பேடு : மப்பேடு அருகே, டூ - வீலர் மீது, ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில், மீன் வியாபாரி இறந்தார். பேரம்பாக்கம் அடுத்த, சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 33. மீன் வியாபாரியான இவருக்கு ரோஸ், 30, என்ற மனைவியும், 12, 9 வயதில் மகன், மகள் உள்ளனர்.இவர், நேற்று முன்தினம் மாலை, பேரம்பாக்கத்தில் நடந்த சந்தையில் காய்கறிகள் வாங்கி கொண்டு, பேஷன் புரோ டூ -வீலரில் சிவபுரம் நோக்கி திரும்பி

மப்பேடு : மப்பேடு அருகே, டூ - வீலர் மீது, ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில், மீன் வியாபாரி இறந்தார்.

பேரம்பாக்கம் அடுத்த, சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 33. மீன் வியாபாரியான இவருக்கு ரோஸ், 30, என்ற மனைவியும், 12, 9 வயதில் மகன், மகள் உள்ளனர்.இவர், நேற்று முன்தினம் மாலை, பேரம்பாக்கத்தில் நடந்த சந்தையில் காய்கறிகள் வாங்கி கொண்டு, பேஷன் புரோ டூ -வீலரில் சிவபுரம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்.அப்போது, இருளஞ்சேரி கிராமம் அருகே சென்ற போது, எதிரே வந்த ஷேர் ஆட்டோ மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில், படுகாயமடைந்த ரமேஷ், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.இது குறித்து, மப்பேடு போலீசில், இவரது மனைவி ரோஸ் அளித்த புகாரை அடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X