வெளிநாட்டு வேலை மோசடிஒருவர் கைதுமதுரை: கீழவளவு லத்தீப்32. இவரது உறவினர்களுக்கு குவைத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி தஞ்சாவூர் பாபநாசம் முகமது அசாருதீன் 27, உட்பட 6 பேர் ரூ.7.5 லட்சம் பெற்று மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டார்.
கஞ்சாவுடன் கைதுமதுரை: ஊமச்சிக்குளம் ராமகிருஷ்ணன் 23, திருமால்புரம் பழனிகுமார் 27, சதீஷ்குமார் 22, ஆகியோர் 4 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக எம். சத்திரப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சர்வேயர் காலனியில் 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக புதுார் திருஞானம் 24, வேல்முருகன் 29, செல்லுார் அரவிந்தன் 27, டி.ஆர்.ஓ., காலனி பாலமுருகன் 27, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வண்டியூரில் 1.250 கிலோ கஞ்சாவுடன் யாகப்பா நகர் லோகேஸ்வரன் 21, 1.150 கிலோ கஞ்சாவுடன் கல்மேடு அஜீத்குமார் 20, கைது செய்யப்பட்டனர்.
ஏழு பேர் கைதுமதுரை: வெங்கடஜலாபுரத்தில் வழிப்பறி செய்யும் நோக்கில் பதுங்கியிருந்த மணிநகரம் குருசுராஜ் 19, ஜெய்ஹிந்த்புரம் ஹரிஹரன் 21, ஜெய்ஹிந்த்புரம் அஜய் 21, கணேஷ்சிங் 19, பாலகுமார் 21, விளாங்குடி ராகுல் 19 உட்பட 7 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர்.
நகை திருட்டுமதுரை: அவனியாபுரம் ஜான் எட்வர்ட் 46. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ரோடு இமானுவேல் சர்ச் முன் நின்றிருந்தபோது அவரது 3.5 பவுன் நகையை மர்மநபர் திருடினார். திடீர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்றவர் கைதுமேலுார்: கீழையூர் - அட்டப்பட்டி ரோட்டில் கீழவளவு போலீசார் ரோந்து சென்ற போது மது விற்ற கீழையூரை சேர்ந்த ராமுவை 32, கைது செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மாணவிக்கு பாலியல் தொந்தரவுமாணவர் கைதுதிருமங்கலம்: கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி கல்லுாரி ஒன்றில் படித்து வருகிறார். பக்கத்து ஊரை சேர்ந்த சரவணபாண்டி 20, மதுரை தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். திருமணம் செய்வதாக கூறி மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE