ஒரே நாளில், ஒட்டுமொத்த உறவுகளையும் வாரிச் சென்ற சுனாமி பேரழிவு நிகழ்வின், 16ம் ஆண்டு நினைவு தினம், சென்னைவாசிகளால் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மணல் மேடை மீது, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், படகில் ஆழ்கடலுக்கு சென்றவர், மலர்கள் துாவியும், பாலை கடலில் ஊற்றியும், அஞ்சலி செலுத்தினார். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்l எஸ்.என்.செட்டி தெரு சந்திப்பில் செதுக்கப்பட்டிருந்த சுனாமி நினைவு மணல் சிற்பத்திற்கு, பொதுமக்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர் தொடர்ந்து, பிரமாண்ட மலர் வளையத்துடன் அணிவகுத்தவர்கள், காசிமேடு கடற்கரையில் மணல் மேடை மீது, மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
பின், அன்னதானம் வழங்கப்பட்டதுl திருவொற்றியூரில், எல்லையம்மன் கோவில் சந்திப்பில் இருந்து, பால்குடத்துடன், அமைதி பேரணி சென்று, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். இதில், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்l திருவொற்றியூர், கே.வி.கே.,குப்பம் கடற்கரையில், 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று, மலர் துாவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்l திருவொற்றியூர் குப்பத்தில், 108 பால் குடங்களை சுமந்தபடி, பெண்கள் பேரணியாக சென்று, கடலில், பால் ஊற்றியும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர். திருவொற்றியூர், ஒண்டிகுப்பம் கடற்கரையில், கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
எண்ணுார், தாழங்குப்பம் கடற்கரையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர், சுனாமி அஞ்சலி நிகழ்வாக, கடலில் பால் ஊற்றி, மலர் துாவினர். இதில், நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தவிர, ஆங்காங்கே கடற்கரைகளில், மீனவ பெண்கள், மணலை பிடித்து வைத்து வழிபாடு செய்தும், கடலில் பாலை ஊற்றி, இனியொரு சுனாமி ஆழிப்பேரலை ஏற்படக்கூடாது என, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.l பெசன்ட் நகர், ஓடைமா நகர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில், சுனாமியால் குடும்பத்தினரை இழந்த மீனவர்கள், அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து, கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தினர். ஓடைமாநகரில் மீனவர் குடும்பத்தினர், நேற்று காலை ஊர்வலமாகச் சென்று, கடலில் பால் ஊற்றி, கண்ணீர் மல்க மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE