பொது செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ.,களுக்கு நீதிமன்ற பயிற்சி

Added : டிச 27, 2020
Share
Advertisement
மேலுார் : 'பி.டி.ஓ., ஏ.பி.டி.ஓ.,களுக்கு தாசில்தார்களுக்கு போன்று நீதிமன்ற பயிற்சி வழங்கவேண்டும்,' என, மேலுாரில் நடந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். இணை செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில தலைவர்

மேலுார் : 'பி.டி.ஓ., ஏ.பி.டி.ஓ.,களுக்கு தாசில்தார்களுக்கு போன்று நீதிமன்ற பயிற்சி வழங்கவேண்டும்,' என, மேலுாரில் நடந்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். இணை செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில தலைவர் பாலசுப்ரமணியன், மாநில பொது செயலாளர் முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கினர்.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான 17 பி குற்றச்சாட்டு குறிப்பாணையை அரசு ரத்து செய்ய வேண்டும். அம்மா சிமென்ட் கோடவுன் பொறுப்பாளர்கள், மகாத்மாகாந்தி தேசிய வேலைஉறுதி திட்ட கணினி ஆப்பரேட்டர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை சம்பளம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X