மதுரை : மதுரை மாவட்டத்தில் பொங்கல் பரிசுதொகுப்புடன் ரூ.2500 வழங்க நேற்று வரை 2.74 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டுள்ளது.இம்மாவட்டத்தில் 8 லட்சத்து 86 ஆயிரத்து 699 அரிசி கார்டுதாரர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு 2021 ஜன., 4 முதல் பொங்கல் பரிசுதொகுப்பு, ரூ.2500 வுடன் வழங்கப்படுகிறது. இதற்காக ரேஷன்கடை விற்பனையாளர்கள் வீடு வாரியாக சென்று கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகித்து வருகின்றனர். பல இடங்களில் ரேஷன்கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று டோக்கன் பெற முயன்றனர். இதனால் சில கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நேற்று மாலை வரை 2 லட்சத்து 74 ஆயிரத்து 419 டோக்கன் வழங்கப்பட்டன. டோக்கனில் குறிப்பிடும் நாளில் சென்று ரேஷன்கடைகளில் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகையை பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE