மதுரை : மதுரை கலெக்டர் அன்பழகன் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பிறந்த 18 வயது நிரம்பிய சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அரசு அவ்வையார் விருது வழங்குகிறது.
மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்த பெண்கள் விருதுக்கு தகுதியானவர்கள். தகுதியான பெண்கள் டிச., 29க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், 35, கிழக்கு 2வது குறுக்குத்தெரு, கே.கே.நகர்,மதுரை-625 020 முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0452-258 0259ல் தொடர்பு கொள்ளலாம், என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE