திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டில் தி.மு.க.,சார்பில் மக்கள் சபை கூட்டம் நடந்தது.
தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.செந்தில்குமார் பேசுகையில், ''தி.மு.க எப்பொழுது ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதுதான் பொது மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அ.தி.மு.க.,வினர் அடிப்படை தேவைகளை செய்து தரவில்லை. கொள்ளையடிப்பது அவர்களது குறிக்கோளாக இருந்தது' என்றார்.வார்டு பொறுப்பாளர் முருகானந்தம் செய்திருந்தார். முன்னாள் அவைத்தலைவர் பஷீர் அகமது, நகரச் செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், இளைஞரணி அமைப்பாளர் கணேசன், ஒன்றிய தலைவர் ராஜா, முன்னாள் தலைவர் சந்திரசேகரன் பங்கேற்றனர்.
குஜிலியம்பாறை ஒன்றிய தி.மு.க., சார்பில் கரிக்காலியில் மக்கள் சபை கூட்டம் நடந்தது.செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பாளையம் நகர செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். பொது மக்களின் தேவைகள், பிரச்னைகள், குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தனர். நிர்வாகிகள் சவுந்தர், மாரிமுத்து, சமதி, கருப்பையா, ராஜேந்திரன், ராஜ்குமார் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE