பொது செய்தி

இந்தியா

அம்மையார் கோவிலில் தர்மபுரம் ஆதீனம் தரிசனம்

Added : டிச 27, 2020
Share
Advertisement
காரைக்கால்:காரைக்கால் அம்மையார் கோவிலில் தருமபுரம் ஆதினம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மாச்சாரிய சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார்.காரைக்கால், பாரதியார் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் திருக்கயிலாய பரம்பரை திருத்தருமபுரம் ஆதின 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மாச்சாரிய சுவாமி வருகை

காரைக்கால்:காரைக்கால் அம்மையார் கோவிலில் தருமபுரம் ஆதினம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மாச்சாரிய சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார்.

காரைக்கால், பாரதியார் சாலையில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் திருக்கயிலாய பரம்பரை திருத்தருமபுரம் ஆதின 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மாச்சாரிய சுவாமி வருகை தந்தார்.அவரை, கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

சிவாச்சாரியார்கள் பூர்ணகும்ப மரியாதை வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து, அம்மையார் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், தர்மபுரம் பகுதியில் உள்ள யாழ்மூரிநாதர் கோவில் தரிசனம் செய்துவிட்டு, இன்று சனிப் பெயர்ச்சி விழா நடைபெறும், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் மடத்திற்கு சென்றார். அவரை, கோவில் நிர்வாகம் சார்பில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் வரவேற்பு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X