சென்னை:'சாப்பிடும் சாப்பாட்டிலும், அ.தி.மு.க., அரசு ஊழல் செய்துள்ளது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூர் தி.மு.க., சார்பில் நடந்த, 'தமிழகம் மீட்போம்' தேர்தல் பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசியதாவது:
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசு இலவசமாக அரிசி கொடுக்கிறது. அந்த அரிசியை வெளிச்சந்தையில் விற்று, ஊழல் செய்துள்ளார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.ஏப்., மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு, இலவச அரிசி வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகத்துக்கு, மத்திய அரசு மொத்தம், 5.36 லட்சம் டன் அரிசி ஒதுக்கியது. இந்த அரிசியை வாங்கி, அனைவருக்கும் கொடுத்து விட்டதாகப் பேட்டி தரும் அமைச்சர் காமராஜ் தான், இவ்வளவு அரிசியை வைக்க இடமில்லை என, மத்திய அரசிடம் சொன்னதாகவும் பேட்டியும் தருகிறார். எது உண்மை?இவர்கள் வெளிச்சந்தையில் விற்றுள்ளனர்.
இப்படி எடுத்துச் செல்லப்பட்ட அரிசி, துாத்துக்குடியில் பிடிப்பட்டுள்ளது. இது தொடர்பாக, காமராஜ் வெளியிட்ட அறிவிப்புகள், முன்னுக்கு பின் முரணாக உள்ளன. சாப்பிடும் சாப்பாட்டில் ஊழல் செய்யும் ஆட்சி தான் இந்த ஆட்சி. சோழ நாடு சோறுடைத்து என்பர். இப்படி அரிசியை கூட விட்டு வைக்காமல், ஊழல் செய்யும் இந்த நச்சு கூட்டத்திற்கு முடிவு கட்ட, தஞ்சை தரணி தயாராகட்டும். அ.தி.மு.க., அரசை நிராகரிப்போம்; தி.மு.க., அரசை மலர வைப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE