சென்னை:''பா.ஜ., தலைவர்கள், அக்கட்சியினரை குஷிப்படுத்த தெரிவிக்கும் கருத்துக்களுக்கு, மதிப்பளிக்க முடியாது,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 16ம் ஆண்டு, சுனாமி அஞ்சலி நிகழ்ச்சியில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றார். பின், அவர் அளித்த பேட்டி:இட ஒதுக்கீடு விவகாரத்தில், மிக கவனமாக கையாள வேண்டும் என்ற அடிப்படையில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால், அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணியில் பிரச்னை கிடையாது. தொடர்ந்து, அவர்கள் கூட்டணியில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வில் குடும்ப அரசியல் கிடையாது. தி.மு.க., தான், மூன்று தலைமுறையாக, வாரிசு அரசியல் செய்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கிற போது, மெகா கூட்டணியோடு, பிரம்மாண்ட பொதுகூட்டம் நடக்கும். அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்தோம். அதுபோல, பா.ஜ., நிலைப்பாட்டை, அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா தான் அறிவிக்க வேண்டும்.அதை விடுத்து, தமிழகம் வரும், பா.ஜ., தலைவர்கள், கட்சியினரை குஷிப்படுத்த தெரிவிக்கும் கருத்துகளுக்கு, மதிப்பளிக்க வேண் டிய அவசியம் இல்லை.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE