கோவை:''பிரிட்டன் சென்று வந்த பயணிகளால் கொரோனா அச்சம் கோவைக்கு இல்லை,'' என, கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.
கோவை கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:பிரிட்டனில் இருந்து கோவை வந்த, 97 பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 90 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு நாளைக்கு புதிய பாதிப்பு, 100க்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், 50க்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறப்பு சதவீதம், 1.24 ஆகவும், தொற்று பாதிப்பு சதவீதம், 2.8 ஆகவும் உள்ளன. ஆக., மாதம், 250 பேர் இறந்த நிலையில், டிசம்பரில் 30 பேர் என்ற அளவில் குறைந்துள்ளது.பிரிட்டன் பரிணாமமாற்ற கொரோனாவால் கோவைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE