சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை குப்பையில் வீசிய பெண் டாக்டர் வாழ்வில் விரக்தியால் தற்கொலைக்கு முயற்சி

Added : டிச 27, 2020
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி அருகே, குழந்தையை குப்பைக்குள் வீசி சென்ற பெண், விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில், குப்பைக் கிடங்கில், நேற்று முன்தினம், ஐந்து வயது பெண் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டார். சிறுமி கிடந்த இடத்துக்கு அருகே, தின்பண்டம், துணி உட்பட பொருட்கள் சிதறிக்கிடந்தன.

அவிநாசி:அவிநாசி அருகே, குழந்தையை குப்பைக்குள் வீசி சென்ற பெண், விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் கிராமத்தில், குப்பைக் கிடங்கில், நேற்று முன்தினம், ஐந்து வயது பெண் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டார். சிறுமி கிடந்த இடத்துக்கு அருகே, தின்பண்டம், துணி உட்பட பொருட்கள் சிதறிக்கிடந்தன. பொருட்களை ஆய்வு செய்த போலீசார், 'பில்' விபரப்படி, பெங்களூருவில் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் விசாரித்தனர்.

ஒரு பெண் பொருள் வாங்கியதும், அவருடன், சிறுமி இருந்ததும் 'சிசிடிவி' கேமராவில் பதிவானது.டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, சிறுமி கிடந்த இடம் அருகே, ஒரு பெண் சந்தேகத்துக்குரிய நிலையில் நின்று கொண்டிருந்தார்.

ஊர்மக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் கூறியதாவது:தன் பெயர், சர்மிளா, ஷைலஜா குமாரி என்று மாற்றி மாற்றி சொன்ன அப்பெண், டாக்டர் என்றும், பெங்களூருவில் கிளினிக் வைத்துள்ளதாகவும் கூறுகிறார். கணவரை பிரிந்து, பெங்களூருவில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.தற்கொலை செய்யும் எண்ணத்துடன் திருப்பூர் வந்த அப்பெண், இருமல் மருந்தை முழு பாட்டிலையும் குழந்தைக்கு கொடுத்துள்ளார். அதனால், குழந்தை சுய நினைவிழக்கவே, குப்பை தொட்டியில் வீசியுள்ளார். அத்துடன், தானும் எலியை கொல்லும் விஷ மருந்து குடித்துள்ளார்.

இருவரும் கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உறவினர்களிடம் விசாரித்தோம். எம்.பி.பி.எஸ்., படித்துள்ள அவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரிந்து வாழ்கிறார். விவகாரத்துக்கும் விண்ணப்பித்துள்ளார். மன அழுத்தம் ஏற்பட்டு, குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X