பொது செய்தி

தமிழ்நாடு

பைக்காராவில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் ஆர்வம்

Added : டிச 27, 2020
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி அருகே, பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.நீலகிரியில், தோட்டக்கலை, சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான அனைத்து சுற்றுலா ஸ்தலங்களும், கொரோனா விதிமுறை தளர்வுக்கு பின் திறக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பைக்காரா அணையில் இருந்து மின்உற்பத்தி மற்றும் கிராமங்களின் குடிநீர்

ஊட்டி:ஊட்டி அருகே, பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

நீலகிரியில், தோட்டக்கலை, சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான அனைத்து சுற்றுலா ஸ்தலங்களும், கொரோனா விதிமுறை தளர்வுக்கு பின் திறக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பைக்காரா அணையில் இருந்து மின்உற்பத்தி மற்றும் கிராமங்களின் குடிநீர் தேவைக்காக, நீர் திறக்கப்பட்டுள்ளது. 100 அடி கொண்ட பைக்காரா ஏரியில், தற்போது 65 அடிவரை தண்ணீர் உள்ளது.

இங்கு படகு சவாரி செய்வதில், சுற்றுலா பயணிகள் மத்தியில், ஆர்வம் அதிகரித்துள்ளது. இங்குள்ள படகில் செல்ல, சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், குறைந்தளவில், 'ஸ்பீடு போட்' உள்ளதால், பலரும் ஏமாறும் நிலை உள்ளது.பயணிகள் கூறுகையில், 'சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறு, ஸ்பீடு போட் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X