இந்திய நிகழ்வுகள்
சிறுத்தை கடித்து சிறுமி பலி
ஜுனகத்: குஜராதில் ஜுனகத் மாவட்ட வன கிராமத்தில், ஆர்த்திபென் மக்வானா, 17, நேற்று முன்தினம் துணி துவைத்தார். அங்கு வந்த சிறுத்தை, அவரது கழுத்தை கடித்து, இழுத்துச் செல்ல முயன்றது. சிறுத்தையிடம் இருந்து சிறுமியை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் பலியானார்.
லாரி மோதி 5 பேர் பலி
ஐதராபாத்: தெலுங்கானாவின் விகராபாத் மாவட்டத்தில், நான்கு பெண்கள் உட்பட ஐந்து விவசாய தொழிலாளர்கள், நேற்று காலை ஆட்டோவில் வேலைக்கு புறப்பட்டனர். தன் வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்திய டிரைவர், சாப்பிடச் சென்றார். அப்போது வேகமாக வந்த லாரி, ஆட்டோ மீது மோதியதில், அதிலிருந்த ஐந்து பேரும் பலியாயினர்.
தமிழக நிகழ்வுகள்

கோவை அருகே ரூ90 லட்ம் ஹவாலா பணம் பறிமுதல்
மதுக்கரை:கோவை அருகே கத்தியை காட்டி மிரட்டி, கடத்தி செல்லப்பட்ட காரில் இருந்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தீப்பிடித்து எரிந்த கார்
ஆலந்துார் : கிண்டியில், கம்ப்யூட்டர் இன்ஜினியரின் கார், சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தில் மீன் வியாபாரி பலி
மப்பேடு : மப்பேடு அருகே, டூ - வீலர் மீது, ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில், மீன் வியாபாரி இறந்தார்
கூரை வீடு தீப்பிடித்து ரூ 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது.பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் அருணகிரி; வெளிநாட்டில் உள்ளார். இவரது,மனைவி சத்யா, 29; இவரது கூரை வீடு, நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த, பரங்கிப்பேட்டை தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
டோல்கேட்டை முற்றுகையிட்ட 11 பேர் கைது
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் டோல்கேட் முற்றுகை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரிட்டனிலிருந்து மதுரை திரும்பிய நால்வர் தலைமறைவு
மதுரை : பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 80 பேரில் நால்வர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸ் உதவியுடன் சுகாதாரத்துறை தேடுகிறது.
ஆயுதப்படை போலீஸ் தற்கொலை
சென்னை:சென்னை, ஆயுதப்படை போலீஸ்காரர், லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார்.

உலக நிகழ்வுகள்
ஆப்கனில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் நான்கு பேர் பலி
காபூல்:ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்தனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE