திருப்பூர்:உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்திய பின்னரே, தேர்தல் நடத்த, தமிழக அரசு திட்டமிட வேண்டும் என்பது, கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தில், 13 மாநகராட்சி, 58 நகராட்சி, 529 பேரூராட்சி, 385 ஊராட்சி ஒன்றியம், 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகள் உள்ளன. 2019ல், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும், தேர்தல் நடந்தது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு, தேர்தல் நடத்தப்படவில்லை.
தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தல் முடிந்ததும், நகர்ப்புறங்களுக்கு தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு முன், ஒன்றியங்கள் பிரிப்பு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள் தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென, கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் கட்சியினர் சிலர் கூறுகையில், ''நகரை ஒட்டியுள்ள கிராமங்கள் வளர்ச்சி பெற்று உள்ளன. மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாமல், பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் தத்தளித்து வருகிறது. மத்திய, மாநில அரசு நிதியை பெற்று, மக்களுக்கு அடிப்படை தேவை நிறைவேற்றும் வகையில், அவற்றின் தரம் உயர்த்த வேண்டும். அதன் பின்னரே, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE