பொங்கல் பரிசு வாங்க டோக்கன் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு வாங்க 'டோக்கன்' வினியோகம்

Added : டிச 27, 2020
Share
ஊட்டி:நீலகிரியில், அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக, வீடு,வீடாக சென்று, 'டோக்கன்' வழங்கும் பணி துவங்கியது.நீலகிரியில், ஆறு தாலுகாவில், 2.12 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். அரசு, 2,500 ரொக்கத்துடன், பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன்(பொ) கூறுகையில்,''அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும், 2,500 ரூபாய் ரொக்கத்துடன்

ஊட்டி:நீலகிரியில், அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக, வீடு,வீடாக சென்று, 'டோக்கன்' வழங்கும் பணி துவங்கியது.

நீலகிரியில், ஆறு தாலுகாவில், 2.12 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். அரசு, 2,500 ரொக்கத்துடன், பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன்(பொ) கூறுகையில்,''அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும், 2,500 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுக்காக, ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்.

அதிக கார்டுதாரர்கள் உள்ள ரேஷன் கடைகளில், 'தள்ளுமுள்ளு' ஏற்படுவதை தவிர்க்க போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு வழங்கப்படும். பயனாளிகள் சிரமமின்றி பொங்கல் பரிசுகளை வாங்கி செல்ல வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X