சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நுகர்பொருள் வினியோகஸ்தர் போராட்டம் நடத்த முடிவு

Added : டிச 27, 2020
Share
Advertisement
கோவை:தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையால் விற்பனை சரிவு போன்ற நெருக்கடிகளை சந்திப்பதாக நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்மன் மோகன் சங்கர் கூறியதாவது:'ஆன்லைன்' வர்த்தகம் மற்றும் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் நியாயமற்ற

கோவை:தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையால் விற்பனை சரிவு போன்ற நெருக்கடிகளை சந்திப்பதாக நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்மன் மோகன் சங்கர் கூறியதாவது:'ஆன்லைன்' வர்த்தகம் மற்றும் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் நியாயமற்ற செயல்பாடுகளால், பல காலமாக நுகர்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

உதாரணமாக, எங்களுக்கு, 90 சதவீதம், ஆன்லைன் வர்த்தகர்களுக்கு, 80 சதவீதம் என ஒரு பொருளுக்கு இரட்டை விலை கொள்கையை பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன. இதனால், கிராமங்கள் வரை பொருட்களை கொண்டுசேர்த்த எங்களை போன்றவர்களின் வர்த்தகம் பாதிக்கும் குறைந்துவிட்டது.

பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையை கண்டித்து வரும், 30ம் தேதி கருப்பு சட்டை அணிந்து கோவையில் போராட்டம் நடத்துகிறோம். அடுத்து, பொருட்கள் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X