உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
டாக்டர் ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ரஜினியுடன் இணைந்தால், அவரின் செல்வாக்கால் ஜெயித்து, தன்னை முதல்வராக்கி விடுவார் என, நப்பாசையில் இருக்கிறார், கமல். இவர், தன்னை அறிவுஜீவியாக காட்டிக்கொள்ள, யாருக்கு புரியாத வண்ணம் பேசி, அனைவரையும் ஏமாற்றுகிறார்.

ரஜினி எப்போதும், கமல் மீது பெரும் மதிப்பும், நட்பும் பாராட்டுவார்; ஆனால் கமல் அப்படியல்ல. இப்போது அரசியலுக்காக, 'என், 40 ஆண்டு கால நண்பர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்' என்றார், கமல்; இது, சந்தப்பவாத நட்பு பாராட்டுதல். தன் பிரசாரக் கூட்டத்தில், அதிக கூட்டம் திரண்டிருப்பதைக் கண்டு, 'ஆஹா, நாம் முதல்வராகி விடலாம்' என, மனப்பால் குடிக்கிறார், கமல். காமெடி நடிகர் வடிவேலுக்கு, இதைவிட அதிக கூட்டம்
கூடியதை மறக்க முடியுமா?
ரஜினியின் தயவு இருந்தால் தான், தன்னுடைய முதல்வர் கனவு நனவாகும் என்பதால், கூட்டணிக்காக வலிய சென்று கரம் நீட்டுகிறார், கமல். 'ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால்'
என்பது போல, ரஜினிக்கு ஒரு பக்கம் கையை நீட்டிய கமல், இன்னொரு கையை, தன் பழைய அரசியல்ஆலோசகர் பிரசாந்த் கிஷோரிடம் நீட்டியுள்ளாராம். தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, கணிசமான, 'சீட்' பெற்று விடலாம் என, நம்புகிறார்.

தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் குடும்பம், 'உழைத்து' குவித்த பணத்தை, தேர்தல் நேரத்தில் அள்ளி இறைக்கும். கம்யூ., கட்சிகள், 25 கோடி ரூபாய் பெற்றது, அனைவரும் அறிந்ததே. எனவே, கமல் ஏதோ கணக்கு போட்டு வைத்திருக்கிறார். ஆனால் கமலை விட, ரஜினி அதிபுத்திசாலி என்பதை, நாடே அறியும். கமலை நம்பி, ஆற்றில் இறங்குவது ஆபத்து என்பதை, நன்கறிவார் ரஜினி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE