பொது செய்தி

தமிழ்நாடு

நீதி சொன்ன குட்டீஸ்

Added : டிச 27, 2020
Share
Advertisement
''குழந்தைகளுக்கு கதை கேட்பதில் மட்டும்தான் ஆர்வம் இருக்கும் என, நாம் நினைக்கிறோம். அவர்களுக்கு அக்கதைகளில் வரும் கதாபாத்திரம்போல் நடிக்கவும் தெரியும் என்பதை அன்பு இல்ல குழந்தைகள் நிரூபித்து விட்டனர்,'' என்கிறார், மாற்றுக்களம் நாடக இயக்குனர் திலீப்குமார்.கோவை டான்போஸ்கோ அன்பு இல்லத்தில், மாணவர்களால் துவக்கப்பட்ட 'விதைப்போம்' தொண்டு நிறுவனம் மற்றும்
 நீதி சொன்ன குட்டீஸ்

''குழந்தைகளுக்கு கதை கேட்பதில் மட்டும்தான் ஆர்வம் இருக்கும் என, நாம் நினைக்கிறோம். அவர்களுக்கு அக்கதைகளில் வரும் கதாபாத்திரம்போல் நடிக்கவும் தெரியும் என்பதை அன்பு இல்ல குழந்தைகள் நிரூபித்து விட்டனர்,'' என்கிறார், மாற்றுக்களம் நாடக இயக்குனர் திலீப்குமார்.
கோவை டான்போஸ்கோ அன்பு இல்லத்தில், மாணவர்களால் துவக்கப்பட்ட 'விதைப்போம்' தொண்டு நிறுவனம் மற்றும் 'மாற்றுக்களம்' நாடக குழுவினர்கள் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினர். குழந்தைகளுக்கு வாழ்க்கைத்திறன், கல்வி, விளையாட்டு, நாடகக்கலை, மன அழுத்தம் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாடகம் நடத்தப்பட்டது.அதில், அன்பு இல்ல குழந்தைகளே நடிகர்களாக நடித்தனர். கதையின் கதாபாத்திரங்களாக, அங்குள்ள குழந்தைகளே நடித்ததை பார்த்து, மற்ற குழந்தைகள் மிகுந்த உற்சாகம் அடைந்து. ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
'மாற்றுக்களம்' நாடக அமைப்பின் இயக்குனர் திலிப்குமாரிடம் பேசியபோது, ''கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அன்பு இல்ல குழந்தைகளுக்கு, நான்கு நீதி கதைகளை சொல்லி, நாடகமாக நடத்தினோம். அக்குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்து, நடிக்க வைத்தோம். குழந்தைகளுக்கு கதை கேட்பதில் மட்டும்தான் ஆர்வம் இருக்கும் என நினைக்கிறோம். அவர்களுக்கு அக்கதைகளில் வரும் கதாபாத்திங்களை போல் நடிக்கவும் தெரியும் என்பதை நிரூபித்து விட்டனர். ஒரு சோதனை முயற்சியாக, குழந்தைகளை நடிக்க வைத்தோம். உண்மையில் அசத்தி விட்டனார். இதுபோன்ற நாடகங்களை பள்ளிகளில் தொடர்ந்து நடத்த இருக்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X