'தினமலர்' என்றாலே எப்போதுமே வித்தியாசம்தான்! புதுமையை அறிமுகப்படுத்தி, வாசகர்களை ஈர்ப்பதில், நம் நாளிதழுக்கு வேறு யாரும் போட்டியில்லை. நம் நாளிதழ் வாசகியரும் அப்படித்தான். மார்கழி மாத கோலத்திருவிழா போட்டியில் களமிறங்கியதும், தனித்திறமைகளால் நடுவர்களை திணறடித்து விட்டனர்.சாதாரண புள்ளி, ரங்கோலி என்றில்லாமல், ஸ்பூன், டம்ளர், ஜல்லடை, பாட்டில் என, சமையலறை பொருட்களைக் கொண்டு, புதுமையான கோலங்களை வாசகியர் போட்டிருந்தனர். கோலங்கள் என்பதை விட கற்பனைத்திறனால் தீட்டப்பட்ட சித்திரங்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும். பெண்களின் கோலங்களுக்கு, சூரியன் மட்டுமே முதல் ரசிகனாக இருந்த காலம் மாறி, இப்போது, ஒட்டுமொத்த அப்பார்ட்மென்டும் அடிமையாகிக் கிடக்கிறது.அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'போத்தீஸ்' இணைந்து, மார்கழி மாத கோலப்போட்டியை நடத்தி வருகின்றன. வடவள்ளி, கணபதி பகுதிகளை சேர்ந்த நான்கு அப்பார்ட்மென்ட்களில், நேற்று போட்டி நடத்தப்பட்டது. கோலங்களில் சிறந்தது எது என நடுவர்கள் திக்குமுக்காடும் வகையில், போட்டியாளர்கள் அட்டகாசமாக வரைந்திருந்தனர். அதில், வாசகியரின் மெனக்கெடுதல் தெரிந்தது.கற்பனை திறனும், கைவண்ணமும்வழக்கமான கோலங்களில், 'கிரியேட்டிவிட்டி'யை சேர்த்து, வித்தியாசமாக வாசகியர் படைத்திருந்தனர். ஓவிய பிரிவு என, தனியாக வகைப்படுத்தும் வகையில், ஊஞ்சலில் ஆடும் கிருஷ்ணன், ராதை, சக்தி மற்றும் சிவன், கம்ப்யூட்டர் விநாயகர் போன்ற கோலங்கள் கலையம்சத்துடன் இருந்தன. தரையில் பூத்த பூக்கள் போல் மலர்கோலம், வர்ணஜால ரங்கோலி, பல வகை பூக்களால் போடப்பட்ட அத்தப்பூ கோலங்கள் அனைவரையும் கவர்ந்தன. முக கவசம் அணிந்த பொம்மை கோலங்கள், பணத்தால் எதையும் சம்பாதிக்க முடியாது என்ற கருத்தை உணர்த்தும் நாணயங்களால் செய்யப்பட்ட, பண மரம் போன்றவை வரவேற்பை பெற்றன.களமிறங்கிய குட்டீஸ்பெரியவர்களுக்கு போட்டியாக குட்டி, குட்டி கோலங்களில் 'குட்டீஸ்'கள் கலக்கியிருந்தனர். கருப்பு, வெள்ளை விநாயகர், மதச்சார்பின்மையை விளக்கும் மும்மத கோலம், வண்ணத்துப்பூச்சி கோலம் ஆகியவை அம்சமாக இருந்தன. பெரியவர்களை விடவும், 'கான்சப்ட்'களில், அதிக கோலங்களை குழந்தைகள் வரைந்திருந்தனர்.வெஸ்ட் 2 பிரணவம் அப்பார்ட்மென்டில் நடந்த போட்டியில், புள்ளிகோலப் பிரிவில், சுதாராணி, ரங்கோலி பிரிவில், ஜெயப்பிரியா, நெளிக்கோலத்தில், மஞ்சுளா ஆகியோர் வென்றனர். கீதா, மங்கையர் திலகம், காவியா, கீதா, சவ்ஜனா தாக் ஷாயணி, சிவகாமி ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. குடியிருப்பு சங்க பொறுப்பாளர்கள் கஜேந்திரன், பாலு கலந்துகொண்டனர்.ஸ்ரீதக் ஷா சாகர்ஸ் அப்பார்ட்மென்டில் நடந்த போட்டியில், புள்ளி கோலப்பிரிவில், உஷா, ஓவியப் பிரிவில், விஜயகுமாரி, கிரிஜா கண்ணன், உண்ணாமலை ஐஸ்வர்யா ஆகியோர் பரிசுகளை தட்டிச்சென்றனர். ரங்கோலி பிரிவில், மாலதி, ரம்யா, பத்மாவதி, குழந்தைகள் பிரிவில், மைத்ரேயி மற்றும் பிரசன்னா ஆகியோர் வென்றனர். பூக்கோலப் பிரிவில், கீதா, பானுமதி, உஷா, சுதா, ரித்திஸ்ரீ ஆகியோர் பரிசை தட்டிச்சென்றனர். விஜி, சரோஜா, விஜி, லக் ஷிதா மற்றும் சுரேகா, சஹானா, சுருதி, மலர், சமிக் ஷா, தனிஷா, கீதா, மயூர், மதுமதி, கார்த்திகேயன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.தனுஷ் மார்க் நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கடேசன், சாருமதி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். குடியிருப்பு சங்க தலைவர் வைத்தியர் லட்சுமணன், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் பரமேஸ்வரன், துணை தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.ஸ்ரீதக் ஷா விர்தா அப்பார்ட்மென்டை சேர்ந்த கவுசல்யா, ஸ்ரீ வித்யா, சுமிதா ஆகியோர் ரங்கோலி பிரிவிலும், பாரம்பரிய கோலப்பிரிவில், பவானியும் பரிசுகளை பெற்றனர். குடியிருப்பு சங்க தலைவர் கண்ணன், செயலாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.கணபதி, ரமணீஸ் கிரீன் பார்க் அப்பார்ட்மென்டில், புள்ளிகோலப் பிரிவில், அர்ச்சனா, நீத்து மற்றும் ரங்கோலி பிரிவில், காயத்ரி, வித்யா பரிசுகளை பெற்றனர். உஷா, சரண்யாதேவி ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.போட்டியில் பங்கேற்ற, அனைவருக்கும் கண்ணன்ஸ் காபி, சைக்கிள் அகர்பத்தி, ஜீவி மரச்செக்கு எண்ணெய், தனுஷ் மார்க் இட்லி பொடி ஆகியவை வழங்கப்பட்டது.முன்பதிவு அவசியம்!கோலப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர், முன்பதிவு செய்யலாம். போட்டிகள், வரும் ஜன., 1, 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில், காலை, 8:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடைபெறும். கோவை நகரில், அப்பார்ட்மென்டுகளில் வசிப்போர், தங்களது குடியிருப்போர் நலச்சங்க 'லெட்டர் பேடில்' கலந்துகொள்பவரின் பெயர், பிளாட் எண், மொபைல் போன் எண் மற்றும் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் தேதி, நேரம் குறிப்பிட்டு, 87540 33032 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணுக்கு அனுப்பி, பதிவு செய்யலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE