செயற்கை எதிர்ப்பு சக்தியை கண்டறிந்த பிரிட்டன் விஞ்ஞானிகள்

Updated : டிச 27, 2020 | Added : டிச 27, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 40-க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. தற்போது உலக அளவில் பைசர்- பயான்டெக் தடுப்பு மருந்து பிரபலமடைந்து வருகிறது. உலகின் பல நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரிட்டனில் எதிர்ப்பு சக்தி மருந்து

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 40-க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. தற்போது உலக அளவில் பைசர்- பயான்டெக் தடுப்பு மருந்து பிரபலமடைந்து வருகிறது.latest tamil newsஉலகின் பல நாடுகளுக்கு இந்த தடுப்பு மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரிட்டனில் எதிர்ப்பு சக்தி மருந்து சிகிச்சை குறித்து விஞ்ஞானிகளால் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் மருத்துவமனை 'ஏஇசட்டி-7442' என்கிற புதிய வகை எதிர்ப்பு சக்தி ஒன்றை கண்டறிந்துள்ளது. இது அஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து கண்டுபிடித்த குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கியவர்களுக்கு இந்த நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக அதிக ஆற்றல் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
வைரஸ் ஆய்வு நிபுணர் டாக்டர் கேத்தரின் 10 கொரோனா வைரஸ் நோயாளிகள் கொண்டு இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டார். தடுப்பு மருந்து செலுத்தும் பணி தாமதமாகும் பட்சத்தில் இந்த எதிர்ப்பு சக்தியை ஊசிமூலம் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு செலுத்துவதால் வைரஸ் தாக்கத்திலிருந்து அவர்கள் தப்பிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil newsவயது மூப்பு காரணமாக கொரோனா வைரஸ் தாக்கத்தில் அவதிப்படுவோருக்கு இந்த எதிர்ப்பு சக்தி ஊசி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் கூறியுள்ளார். சிலருக்கு வைரஸ் தடுப்பு மருந்து ஒவ்வாமை ஏற்படலாம். அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை கூட்ட இந்த ஊசியை பயன்படுத்தலாம். புரதத்தால் ஆன மாலிக்யூல்கள் கொண்ட எதிர்ப்பு சக்தி உடல் உயிரிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே எதிர்ப்புசக்தி ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. இதன் பெயர் மோனோகிளோனல் ஆன்ட்டி பாடீஸ்.
தடுப்பு மருந்துகள் உடல் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க ஊக்குவிக்கின்றன. ஆனால் செயற்கை எதிர்ப்பு சக்தி, கொரோனா வைரஸ் நோயாளியின் உடலில் செலுத்தப்படுவதால் இயற்கை எதிர்ப்பு சக்தியுடன் இணைந்து உடலில் உள்ள கொரோனா வைரஸ் உடன் மோதத் தயாராகின்றன. இயற்கை மற்றும் செயற்கை எதிர்ப்பு சக்திகள் ஒன்று சேர்வதால் நுரையீரலில் பல்கிப்பெருகும் வைரஸை எளிதில் இவை அழித்து விடுகின்றன.
குறிப்பாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயோதிகர்களுக்கு இந்த செயற்கை எதிர்ப்பு சக்தி ஊசிகள் செலுத்துவதால் அதிக பலன் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
27-டிச-202019:45:07 IST Report Abuse
ocean அய்யா செய்தியை கவனித்து படியுங்கள். இயற்கை மற்றும் செயற்கை எதிர்ப்பு சக்திகள் ஒன்று சேர்ந்து நுரையீரலில் பெருகும் குரோனா வைரஸை அழிக்கின்றன என்று சொல்லப்பட்டுள்ளது.அப்படி என்றால் இயற்கை எதிர்ப்பு சக்தி எது. அதன் பெயரென்ன. உள்ளே செலுத்தப்படும் செயற்கை எதிர்ப்பு சக்தி எது. அதன் பெயரென்ன. நுரையீரலின் இயற்கை எதிர்ப்பு சக்தியுடன் செயற்கை எதிர்ப்பு சக்தி சேர்ந்து குரோனாவை அழித்தால் அவ்வுடலில் இயற்கை எதிரப்பு சக்தி மீண்டும் எப்போது வரும். அது வரும் வரை உடலுக்குள் குரோனா மீண்டும் நுழையாத படி செயற்கை எதிர்ப்பு சக்தியை நுரையீரலுக்கு ஊசி வழியில் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டுமா.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
27-டிச-202010:01:39 IST Report Abuse
oce உலகில் வெய்யில் படாமல் நிழலிலும் வெய்யிலில் உழைத்து வாழ்பவர்களையும் இரு பிரிவுகளாகப் பிரித்து கணக்கெடுத்து பார்த்தால் அப்பிரிவுகளில் சதா காலமும் வெய்யிலிலும் நிழலிலும் ஊடாடி வாழ்பவர்களையும் வேகாத வெய்யிலில் வியர்வை சிந்தி உழைப்பவர்களையும் குரோனா ஒன்றும் செய்வதில்லை.வெய்யில் பட்டால் உடல் கறுத்து விடும் என்ற மூட நம்பிக்கையால் சதா காலமும் சூரிய உஷ்ணம் உடம்பில் படாதவாறு கனத்த உடைகளுடன் நிழலடியிலும் குளிர் சாதன ரூம்களிலும் ஃபேன்களிலும் ஏர் கூலர்களிலும் உழல்பவரகளை தேடியே குரோனா தாக்குவது மிக அதிகமாத் தெரியும். எனக்கு பிடிச்ச கலர் கருப்பு கருப்பு தான். ஆதி புராண காலத்தில் வடக்கில் இருந்த 56 தேசத்து மன்னர்களில் சூரிய குலம் சந்திர குலம் என இரு பெரும் பிரிவுகளாக இருந்தனர்.இந்த பிரிவுகளில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் உடல் நிறத்தை வைத்து அவர்களிடையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பித்தனர். ஒற்றுமை இன்றி எப்போதும் சண்டை செய்து கொண்டிருந்தனர். வேதங்களை படைத்தவர்கள் சூரிய குலத்தினர்.அதை படித்து அதன்படி நடந்தவர்கள் சந்திர குலத்தினர். பிரம்மன் சிவப்பு.சிவம் கருப்பு.விஷ்ணு சிவப்பு.அவர் கரிய கண்ணனாகவும் (சந்திர வம்சத்திலிருந்து சூரிய வம்சம்) மாற்று அவதாரம் எடுத்தார். லட்சுமி சிகப்பு. பார்வதி கருப்பு. சக்தி அம்சங்கள் அனைத்துமே கருப்பு. இப்போது இந்த கறுப்பை வைத்து தான் ராமசாமி கட்சியினர் ஊரை கொள்ளையடிக்கிறார்கள.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
27-டிச-202009:58:43 IST Report Abuse
vbs manian இதே எதிர்ப்பு சக்தியை இலக்கை நெல்லிக்காய் பூண்டு இஞ்சி மிளகு தென் என்று தயார் செய்து கொடுக்கிறது. சொன்னால் மூட நம்பிக்கை என்று அறிவு ஜீவிகள் பதிவு செய்வார்கள்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-டிச-202017:39:28 IST Report Abuse
தமிழவேல் நான் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் இவைகளை வறுத்துப் பொடியாக்கியதை நீரில் அரைக்கரண்டி அளவு கலந்து உட்கொண்டு வருகின்றேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X