மதுரை, : மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் ஸ்ரீ ஆப்தன் சபா சார்பில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடந்தது.
பக்தர்கள் கலசங்கள் எடுத்துவர ஐயப்பன் பூப்பல்லக்கில் பவனி வந்தார். குருசாமி ஹரஹரன், ஐயப்பனுக்கு அபிேஷக ஆராதனை, பூஜைகள் நடத்தினார். பாடகர் நாகராஜ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஐயப்பனுக்கு படி பூஜை, புஷ்பாஞ்சலி, பால், நெய், தேன், சந்தனம் அபிேஷகங்கள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை ஸ்ரீ ஆப்தன் சபா செயலர் மங்கையர்கரசி தலைமையில் ஸ்ரீசாய் விருக் ஷா டிரஸ்ட் மற்றும் சுவாசநேசி யோகா மையம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE